ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக்கலையும் ஒன்று. இது, நுண்ணிய நூல்பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலை. இது, மக்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்ந்த இலட்சியப் பாதையிலே அழைத்துச் செல்லும் தன்மையுடையது, மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா , ரா.பி.சேதுப்பிள்ளை , நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் முதலியார் ஆவார்.
பேச்சும் மேடைப்பேச்சும்
பேச்சு வேறு, மேடைப்பேச்சு வேறு வெறும் பேச்சுக்கும் மேடைப்பேச்சுக்கும் வேறுபாடு உண்டு. பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையில் தெரிவித்தல் வேண்டும். பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்ற வனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சு- கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதித்தல் வேண்டும். பிறருக்கு எழுதி உணர்த்துவதனைக் காட்டிலும் இனியமுறையில் பேசி உணர்த்தும் மேடைப்பேச்சு, முறையான மிகுந்த பயனை நல்கும் எல்லாம்.
பேச்சுக்கலையில் மொழியும் முறையும்
மேடைப்பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி என்றாலும், அக்கருத்துகளை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன. பேச்சுக்கலையில் வெற்றிபெற வலிமையான கருத்துகள் தேவை. ஆயினும், அவற்றைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசத் தெரிதல் வேண்டும்.
பேச்சாளரின் நெஞ்சிலே உள்ள கருத்து, கேட்பவர்கள் நெஞ்சங்களிலே பாய்தல் வேண்டும். மின்சாரம் பாயக் கம்பி தருவியாக இருப்பதுபோலக் கருத்தை விளக்க மொழி கருவியாக உள்ளது. ஆதலால், பேதம்மொழி அழகியதாகவும் தெளிவாகவும் சிக்கலற்றதாகவும் இருத்தல் வேண்டும். அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்தவல்லதே சிறந்த மொழி நடை
நாம் சொல்லுகின்ற முறையில் அச்சொல்லுக்குத் தனிப்பொருளும் தனிவேகமும் பிறக்கின்றது; உயிரும் உண்டாகின்றது. எனவே, சொல்லை ஆராய்ந்து அறிந்து அளவாகப் பயன்படுத்துதல் வேண்டும். சொல் கிடைக்கிறதே என்று நம்மை அறியாமல் அவற்றைக் கொட்டிவிடுதல் கூடாது; கொட்டியதை நம்மால் அள்ள முடியாது.
நாம் சொல்லுகின்ற செய்தியை ஒருவரிடம் மிகவும் விரைவாகச் சொல்லுதல் கூடாது. சொல்லியதனையே திரும்பத் திரும்பச் சொல்லுதல் தவறு. பொய்யுரையும் மிகைப்படுத்தலும் வேண்டா. நாம் எதனைச் சொல்ல நினைக்கிறோமோ அதனைத் தெளிவாகக் காலம் அறிந்து சொல்லுதல் வேண்டும்.
முக்கூறுகள்
பேசும்பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தித் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துப் பேசுவதனையே பேச்சுமுறை என்கிறோம். இதனை எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனவும் கூறலாம். மேடைப்பேச்சினைத் தொடங்கும்போதே எடுப்புடன் தொடங்குதல் வேண்டும். பின்னர்ப் பேசவேண்டிய பொருளைக் கேட்பவர்களுக்குச் சோர்வு ஏற்படாதவகையில் சுவையுடன் எடுத்து, முடிவில் சுருக்கத்தினைக் கூறி, அக்கருத்தினை நிலைநாட்டி முடித்தல் வேண்டும்.
எடுத்தல்
பேச்சைத் தொடங்குவது எடுப்பு. பேச்சின் தொடக்கம் நன்றாக இராவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினைக் குறித்த நல்லெண்ணம் தோன்றாது. தெட்டுத்தடங்கலின்றிப் பேசுவதற்குத், தொடக்கமே அடித்தளமாகும். கேட்போரை வயப்படுத்தும் முறையில் பேச்சைத் தொடங்குதல் வேண்டும். அவையோர்தம் உள்ளங்களைக் கேட்பதற்குரிய பக்குவத்தில் வைத்திருத்தல் வேண்டும். மண்ணில் ஈரப்பதம் இருந்தால்தான் விதைக்க முடியும் என்பதனைப்போலக் கேட்போரைத் தன்வயப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.
அவையில் இருப்போரை விளித்துச் சுருக்கமான முன்னுரையுடன் பேசத் தொடங்குவதே சிறப்புடையது. பேசத் தொடங்கிய ஓரிரு மணித்துளிகள் பேசப்போகும். பொருளில் புகுந்துவிடுவது பாராட்டுக்குரியது; இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப - தொடக்கவுரை அமைதல் நன்று.
தொடுத்தல் முறை
தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும்முறை தொடுத்தல் எனப்படும். அன்றலர்ந்த மலரை அழகுபட மாலையாகத் தொடுத்தல் இதற்கோர எடுத்துக்காட்டு. மலர்களின் நறுமண வேறுபாடும் நிற வேறுபாடும் உணர்ந்து அவற்றை இடையிடையே அமைத்து மாலைகள் தொடுக்கப்படுதல் இயல்பு. அதுபோலவே, இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துகளும் பிணைத்து பேசுவதே தொடுத்தல் எனப்படும். தாம் பே எடுத்துக்கொண்ட செய்தியின் நுட்பங்களையும் கருத்துகளையும் பல தலைப்புகளின்கீழ் வரிசைப்படுத்தி, ஓர் ஓவியம் வண்ணம் தீட்டி, இயற்கை வனப்பை உருவாக்கிக் காட்டுதல் போலப் பேசுதலே ஒரு பேச்சாளரின் கடமையாகும்.
பேச்சின் அணிகலன்கள்
இலக்கியக்கூறுகள் மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றவை பேச்சாளர் சொல்லவேண்டிய கருத்தைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால்தான் கேட்பவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும். எண்ணங்கள் சொல்லும் முறையால் அழகுபடுத்துவதே அணி எனப்படும். நாம் ஒரு வீடு கட்டுகிறோம்; அது வெறும் சுவராக மட்டும் அமைந்திருந்தால் அழகு இராது. எனவே, இடையிடையே அழகிய மாடங்கள், சாளரங்கள், வளைவுகள் தூண்கள் இவற்றையும் அமைத்து வீட்டை மேலும் அழகுபடுத்துகிறோம். அதுபோல பேச்சுக்குக் கருத்துப்பொலிவும் குரலோசையும் மட்டுமே போதியன அல்ல இடையிடையே கேட்போர் சுவைக்கத்தக்க உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு வகையான தடைகள், சிறு சிறு கதைகள் முதலியன அமைம் பேசுவதே சிறந்த பேச்சாகும். பேச்சில் அணிகள் அணு ஆற்றல் போல்வன.
உணர்த்தும் திறன்
சொல்லக் கருதும் செய்தியைச் சுவையுடன் சொல்லுதல் வேண்டும்; நிரல்படச் சொல்லுதல் வேண்டும்; திறம்படச் சொல்லுதல் வேண்டும்; தெளிவாகவும் சொல்லுதல் வேண்டும் உணர்ச்சி ஒளி மின்னுதல் வேண்டும்; ஊக்கம் ஊக்கம் துடித்தல் வேண்டும். இவையனைத்தும் பேச்சின் இன்றியமையாப் பொருண்மைகள்.
உணர்ச்சி உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும். அப்பேச்சே கேட்போர் உள்ளத்தில் ஊடுருவிச் சென்று, கேட்பவர்களுடைய உள்ளத்தைப் பிணிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக அமையும். பேச்சாளர், தாம் உணர்ச்சிவயப்படாது, கேட்போரின் உள்ளத்தில் தாம் விரும்பும் உணர்ச்சியை ஏற்படுத்தும்வகையில் பேசுதல் வேண்டும்
முடித்தல்
பேச்சைத் தொடங்குவதிலும் பொருளை விரிப்பதிலும் செலுத்தும் கவனத்தை, அழகுறப் பேச்சை முடிப்பதிலும் செலுத்துதல் வேண்டும் பேச்சை முடிக்கும் போது தான், பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனத்தில் பதியுமாறு சுருக்கிக் கூறவும் கூடும் பேச்சாளர் கருத்துக்கு அவையோர் இணங்குவதும் மாறுபடுவதும், அவர்தம் பேச்சின் முடிவுரையைப் பொருத்தே அமையும். நாடகக்கலை, திரைப்படக்கலை போன்றே பேச்சுக்கலையிலும் முடிவு தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக்கூடியது எனலாம்.
பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன. சிறந்த பேச்சாளர் எப்படி முடித்தாலும் அழகுறவே அமையும் எனலாம். தமிழகத்தில் பேச்சுக்கலை இன்று சிறப்புற்று விளங்குவதனையும் தங்கள் கருத்திற்கு வலிமை சேர்த்து எல்லாத் தரப்பினரும் அதனைக் கையாளுவதனையும் காணலாம்.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
- குறள், 648
Incoming
Search Terms:
பேச்சுக்கலை,#பேச்சுக்கலை,பேச்சுக்கலை! art of speech best
tamil speech in tamil,பேச்சு,பேச்சுக்கலைஎன்றால்என்ன,#பேச்சுகள்,#பேச்சு,# பேச்சு
கலை பயிற்சி,பேச்சுக்கலைவடிவங்களும்வகைகளும்,ஊக்கப் பேச்சாளர்,பேச்சு போட்டி வணக்கம்,பேச்சின்முக்கூறுகள்,#மேடைபேச்சு,#தமிழ்பேச்சு,ஆளுமைத்திறனைவளர்க்கும்பேச்சுக்கலை,மேடைப்பேச்சு,#மேடைப்பேச்சு,பேச்சாளர்,பேச்சு
போட்டி தொடக்க வரிகள்,#பேச்சுபேச்சாத்தான்இருக்கணும்,வாங்கபேச்சாளர்ஆகலாம்
pechu
kalai,pechu,#medai pechu,pechukalai best pechu in tamil,natchathira kalai vizha
sun tv,malaysia natchathira kalai vizha,malaysia natchathira kalai vizha 2018
full show,pechalar,#medaipechu,makkal sabai tamil
debate,pechatral,kalaignar,kalaignar tv,#medaipetchu,speech clarity,natchathira
kalaivizha,galatta,mooochu,news 18 tamilnadu makkal sabai tamil debate
show,natchathira kalaivizha 2018,kalaignar vazhnthu kattuvom