Hot Widget

Type Here to Get Search Results !

Ads

What is Google Adsense in Tamil | Google Adsense Explain in Tamil

What is Google Adsense in Tamil | Google Adsense Explain in Tamil

Google AdSense என்றால் என்ன? 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிகச் சிறந்த தலம் கூகுள் ஆட்சென்ஸ் ஆகும். இதன் மூலமாக பல பள்ளி மாணவர்கள், வீட்டுப் பெண்கள் மற்றும் இதையே முழுமையாக வேலையாக மாற்றிக் கொண்டும் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவுக்கு பயனுள்ள உண்மையை உள்ள தலமாகும். விளம்பரதாரர்கள் இடம் விளம்பரத்தை வாங்கி அதை கூகுள் நிறுவனத்தில் கட்டுரை, வீடியோ, செயலி மூலமாக விளம்பரங்களை கொடுப்பதன் மூலமாக பணம் சம்பாதிக்கப்படுகிறது. அந்தப் பணத்தை சேமிக்கும் கணக்குதான் கூகுள் அட்சன்ஸ் ஆகும். விளம்பரதாரர்கள் விற்பனையாளர்கள் (அதாவது நாம்) Creators இருவருக்கிடையில் ஒரு தரகராக கூகுள் நிறுவனம் உள்ளது. 

உதாரணமாக 

ஒரு தொழிற்சாலை உள்ளது. அந்தத் தொழிற்சாலைக்கு போதுமான விற்பனை இல்லை. அப்போது கூகுள் நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து விளம்பரம் செய்யும். கூகுள் நிறுவனமானது அந்த தொழிற்சாலையின் விளம்பரத்தை நேரடியாக விற்காமல் நம்மைப்போன்ற creators கள் மூலமாக நிற்கச் செய்யும். அந்த தொழிற்சாலையில் இருந்து வாங்கிய பணத்தை கூகுள் நிறுவனத்தின் பங்கினை எடுத்துக் கொண்டு நம்முடைய பங்கினை கூகுள் ஆட்சென்ஸ் போட்டு விடும்.  

கட்டுரை, வீடியோ, செயலி இதன் மூலமாக உங்களுடைய கணக்கில் 100 டாலர் பணத்தை சம்பாதித்து இருக்கிறீர்கள் என்றால் அதில் நம்முடைய பங்கு 68% அதாவது 68 டாலரும் மீதமுள்ள 32% அதாவது 32 டாலர் கூகுள் நிறுவனத்தின் பங்காகும். மற்ற நிறுவனங்களில் என்பது 80% என்ற அளவில் இருக்கிறது. 

Google AdSense Account Type 

இரண்டு வகை உள்ளது. 

1.    Hosted AdSense Account

2.   Non Hosted AdSense account

 Hosted AdSense Account 

கூகுள் நிறுவனத்தின் சொந்தமான Platform ஆன YouTube, Blogger, Search இதன் மூலமாக கூகுள் ஆட்சென்ஸ் கணக்கினை உருவாக்கியிருந்தால் அது Hosted AdSense account ஆகும். இதற்கு Revenue கூகுள் நிறுவனம் கொடுப்பது தான். குறைந்த அளவில் Revenue இருக்கும். 

Non Hosted AdSense account 

கூகுள் நிறுவனத்தின் சொந்த பிளாட்பார்ம் ஆக இல்லாமல் கூகுள் ஆட்சென்ஸ் இல் ஒரு கணக்கை உருவாக்கி இருந்தால் அது Non Hosted AdSense account ஆகும். உதாரணமாக WordPress 

இதற்கு Revenue 68% 

Google AdSense Platform

YouTube 

வீடியோவை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்க ஒரு நல்ல தளம் தான் யூடியூப் ஆகும். இது முழுக்க முழுக்க 100% இலவசமான தலமாகும். (E.g Video Content, Video Hosting Websites) இதில் பணம் சம்பாதிக்க ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளது. தற்போது யூடியூபில் பணம் சம்பாதிக்க 1000 Subscribers and 4000 Time hours 12 மாதத்திற்குள் கடந்திருக்க வேண்டும். யூடிபில் மூலமாக ஒரு AdSense கணக்கினை உருவாக்கினால் அது Hosted AdSense account ஆகும். 

Blogger and WordPress Website 

கட்டுரைகள் எழுதுவதன் மூலமாக பணம் சம்பாதிக்க ஒரு நல்ல Platform தான் Blogger and WordPress ஆகும். இதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. சொந்தமான கட்டுரைகள் எழுத வேண்டும். 40-50 Posts, 5 Pages, Free Themes இது போன்றவை சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் AdSense இல் அப்ளை செய்யும்போது அப்ரூவல் கொடுக்கப்படும்

Blogger - Hosted AdSense (Revenue 52%)

WordPress - Non Hosted AdSense (Revenue 68%) 

Search (CSE GOOGLE) 

வலைத்தளம் தேடலின் மூலமாக பணம் சம்பாதிக்க ஒரு நல்ல தளம் ஆகும். இதற்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் கிடையாது. கூகுள் ஆட்சென்ஸ் இல் ஒரு கணக்கினை வைத்திருக்க வேண்டும்.  

Admob 

செயலி ஒன்றை உருவாக்கி அதில் விளம்பரம் கொடுத்து பணம் சம்பாதிக்க ஒரு நல்ல தளம் தான் Admob ஆகும். இதற்கு எந்த ஊரு கட்டுப்பாடுகளும் கிடையாது. ஐந்து நிமிடத்தில் ஒரு AdSense கணக்கினை உருவாக்கிக் கொள்ளலாம். 

எப்படி Google AdSense பணம் சம்பாதிக்கிறார்கள்? 

YouTube - வீடியோ மூலமாக

Blogger - கட்டுரை எழுதுவதன் மூலமாக

Search - வலைத்தளம் தேடலின் மூலமாக

Admob - செயலியில் விளம்பரம் கொடுப்பதன் மூலமாக 

Google AdSense Verification 

உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் இல் உள்ள பணத்தை எடுக்க வேண்டும் என்றால் முதலில் உங்களுடைய கணக்கினை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். இல்லை என்றால் எவ்வளவு பணம் மதிப்பு இருந்தாலும் அதை வெளியே எடுக்க முடியாது. வெரிஃபிகேஷன் செய்வதில் எந்த ஒரு தவறும் இன்றி சரியாக செய்ய வேண்டும். மூன்று முறை மட்டுமே வெரிஃபிகேஷன் செய்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கும். கூகுள் ஆட்சென்ஸ் வெரிஃபிகேஷன் நாட்டிற்கு நாடு வேறுபாடாக இருக்கும். நம்முடைய தாய் நாடான இந்தியாவிற்கு இரண்டு வகையான வெரிஃபிகேஷன் உள்ளது. Pin Verification, Identity Verification இந்த இரண்டு வெரிஃபிகேஷன் சரியாக முடிக்க வேண்டும். 

Google AdSense இல் பணம் எப்படி எடுக்க முடியும்? 

கூகுள் ஆட்சென்ஸ் இல் 10 டாலர் வந்தவுடன் உங்களுடைய bank அக்கவுண்ட்டினை இணைப்பதற்காக ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். முதலில் உங்களுடைய bank கணக்கினை இணைத்துக் கொள்ள வேண்டும். பின்பு 100 டாலர் வந்தவுடன் மட்டுமே உங்களுடைய கணக்கிற்கு பணம் அனுப்பப்படும். குறைவாக இருந்தால் அனுப்ப மாட்டார்கள். 

Google AdSense எந்த தேதியில் பணம் வரும்? 

நீங்கள் பயன்படுத்தி வரும் கூகுள் ஆட்சென்ஸ் கணக்கில் Homepage இல் Balance $100 வரவேண்டும். வலைதளம் மூலமாக சம்பாதிக்க படும் அனைத்தும் earnings ம் தேதி ஒன்றுக்குள் கூகுள் ஆட்சென்ஸ் இல் வந்துவிடும். YouTube பாதிக்கப்படும் பணம் சரியாக தேதி 11 கூகுள் ஆட்சென்ஸ் இல் வரும். தற்போது 8 இல்லை 9ம் தேதிக்குள் சீக்கிரமாக வந்து விடுகிறது.

Balance இல் உள்ள பண மதிப்பு சரியாக 21ம் தேதிக்குள் கூகுள் ஆட்சென்ஸ் லிருந்து உங்களுடைய அக்கவுண்டிற்கு பணம் மாற்றம் செய்வதற்கான மெயில்  உங்களுடைய ஈமெயில் இல்லை ஜிமெயிலுக்கு வந்திருக்கும்.

ஐந்து நாட்களுக்குப் பின்பு உங்களுடைய வங்கி கணக்கில் பணம் வந்திருக்கும். சரியாக தேதி 26 க்கு மேல் பணம் உங்களுடைய வங்கி கணக்கில் அனுப்பப்படும். பணம் வருவதில் ஏதாவது பிரச்சினை என்றால் உங்களுடைய வங்கி கணக்கின் மேனேஜரை அணுகவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad