Hot Widget

Type Here to Get Search Results !

Ads

டென்ஷனில்லாம ஹாப்பியா இருக்க வேண்டுமா?

 

டென்ஷனில்லாம ஹாப்பியா இருக்க வேண்டுமா...

டென்ஷன் டென்ஷன் டென்ஷன்..... இன்றைய காலகட்டத்தில் டென்ஷன் இல்லாத வாழ்க்கை என்பது கனவாக இருக்கிறது. சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசை மட்டுமே அனைவருக்கும் இருக்கும். அந்த ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். வாருங்கள் அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

 

உங்களுக்கு பிறர் கெடுதல் செய்யும் போது, அதனை மன்னித்து விடுங்கள். ஏனெனில், தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது கடவுள் பண்பு. என்னங்க பழமொழி சொல்லி போர் அடிக்கிறேனா. வேறு வழி இல்லையே. கடவுளாக இருந்தால் தான் ஆரோக்கியமா இருக்க முடியும் என்றால் அப்படி இருப்பதில் தவறு எதுவும் இல்லையே. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று சொல்லாமல் நீங்கள் பிறரை மன்னித்தால் தான் உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். இதற்கு மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் உண்டு. 

 

"மறப்போம் மன்னிப்போம்" என்பதை உங்களது குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கும்.

 

அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்திருக்கலாம். அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். எந்த ஒரு வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார். அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலைப் படாதீர்கள். உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விடுவதாக மனதார நம்புங்கள். இதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

 

தவறு செய்யும் நமக்கு மன்னிக்கவும் தெரிய வேண்டும், மன்னிப்புக் கேட்கவும் தெரிய வேண்டும். அதுமட்டுமல்ல அடிக்கடி ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி, வணக்கம் போன்ற சொற்களைத் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்பு மிக்கவராகவும் ஆரோக்கியமானவராகவும் காட்டும்.  

 

என்னங்க இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா இனிமே நோ டென்ஷன் பீ ஹாப்பி! வாழ்க்கையை என்ஜாய் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்...


Tags:

  • how to relieve stress quickly
  • 5 tips to reduce stress
  • i want to live a simple life without stress or worry
  • how to be stress-free and happy
  • how to reduce stress and tension
  • how to relieve stress for a woman
  • how to relieve stress quickly at homeis it possible to live a stress-free life
  • be happy without stress
  • how to remain happy and tension free
  • is struggle essential to happiness

stress,stress relief,stress management,#1 tip to be productive in life without stress,stress free life,working without stress,bhagavad gita on stress,create results without stress,how to manage stress,yoga for stress,how to be happy,how to achieve your goals without stress,how do top performers work without stress?,habits to reduce stress,how to be happy 24*7,how to be happy all the time,aint stressin dance,how to be happy in life,no stress

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad