தமிழ்நாட்டில் மொத்த நிலப்பரப்பு 130 இலட்சம்ஏக்கர் ஆகும். அதில்45 சதவிகித நிலப்பரப்பில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றில், மானாவாரி சாகுபடி பரப்பு 55 சதவிகிதம்ஆகும்.
மானாவாரிபயிர்கள் பெரும்பாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொழியும் காலங்களில் பயிர் செய்யப்படுகிறது. மானாவாரிபயிர்கள் பெரும்பாலும் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, அக்டோபர் முதல் வாரத்தில் உழுது, விதைத்துவிடலாம் என்ற கருத்து சரியானது அல்ல. அவ்வாறுவிதைத்தால் விதைத்த பின்பு பெய்யும் மழை மட்டும் பயிர் வளர்ந்து உழவரின் வளரும் வேளாண்மை விளைச்சல் எடுப்பதற்குப் போதாது. எனவே, கோடை காலத்திலும், தென்மேற்குப் பருவ காலத்திலும் பெய்யும் மழை நீரை நிலத்தில் சேமித்திட கோடை உழவு அவசியமாகின்றது தமிழ் நாட்டில் வருடாந்திர சராசரி மழை அளவு 945 மி.மீ. ஆகும். இதில்தென்மேற்குப் பருவகாலத்தில் 337 மி.மீ. மழையும், வடகிழக்குபருவகாலத்தில் 468 மி.மீ மழையும், கோடைகாலத்தில் 140 மி.மீ மழையும் பெய்கிறது. கோடைஉழவு செய்வதினால் இந்த மழை நீர் ஆவியாகாமல் நிலத்தில் ஈர்க்கப்பட்டு நிலத்தடியில் சேமிக்கப்படுகிறது.
சம்பா பயிர் அறுவடை முடிந்ததும் அவசியம் கோடை உழவு செய்ய வேண்டும். மேலும்முதல் பயிர் சாகுபடி ஆனி தொடங்கி, இரண்டாவதுபயிர் கதை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இதற்குபின் உள்ள இடைப்பட்ட காலமான மாசி-வைகாசி வரை நிலம் பண்படுத்தப்படாமல் பல்வேறு இழப்புகளுக்கு உள்ளாகும் நிலையில் தரிசாக உள்ளது. அப்பொழுது, நாம் வயலில் நன்கு உழுது பண்படுத்தி புழுதி நிலமாக்க வேண்டும் அவ்வாறு செய்வதினால் புழுதியானது மண்ணின் மேல் ஒரு போர்வைபோல் மூடி கீழே உள்ள நீர் ஆவியாகாமல் சேமித்து வைக்கப்படுகின்றது.
ஏன் கோடை உழவு செய்ய வேண்டும்?
- சாகுபடி செய்யப்பட்ட முதல் இரண்டாம் பயிர் அறுவடையின் போது பயிரிலிருந்து கொட்டிய இலைச் சருகுகள் நிலத்தின் மேல் போர்வையாக இருக்கும்
- அறுவடைக்குப் பின் வேர் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி இருக்கும்.
- மேல் மண் இறுக்கமாக காணப்படும். இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் மண்ணுடன் எடுத்துச் செல்லப்படும்.
- நிலத்தோடு மக்க வேண்டிய பயிர்கள், சருகுகள் காற்று வீசும் போது வேறு எடுத்துச் செல்லப்படும். இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
- முந்தையப் பயிர் தூர்கள் கரையானின் தாக்குதலுக்குட்பட்டு பயனின்றி விரயமாகும்.
மேற்கூறியவற்றை சரியான முறையில் பயனுள்ளதாக மாற்றுவதற்கு கோடை உழவு அவசியமாகக் கருதப்படுகின்றது.
மேலும், கோடைஉழவு செய்வதன் மூலம் மேல் மண் அரித்து செல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு மண்ணின் ஈரம் மற்றும் நில வளம் காக்கப்படுகின்றது.
கோடை உழவின் பயன்கள்
கோடை உழவு பெரிய செய்வதால் கட்டிகள் நிலத்திலுள்ள உடைக்கப்பட்டு நிலம் நன்கு பண்படுத்தப்படுகின்றது. இதனால்மழை பெய்வதற்கு முன்பே பருவ விதைப்பு மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கோடைஉழவு செய்யாமல் இருந்தால் பெய்யும் மழைநீர் நிலத்திற்குள் இறங்காமல் மேல்பரப்பில் வழிந்தோடி சத்துள்ள அரித்துச் செல்லப்படும். நிலம்வளம் குறைந்து பயிர் விளைச்சல் குறைவதுடன் பூச்சி தாக்குதலும், களைகளும்அதிகமாகும். கோடைஉழவினால் மண்ணரிப்பு ஏற்படாமல், மழைநீர்முழுவதும் உறிஞ்சப்படுவதுடன், பூச்சிபூஞ்சாண நோய் தாக்குதலிலிருந்து அடுத்து பயிரிடப்படும் பயிரையும் காக்க முடிகிறது. களைகள்கோடை உழவினால் அப்புறப்படுத்தப்படுகிறது. மேலும், மானாவாரியில் பயிர் விதைப்பு செய்யும் பொழுது ஏற்படும் உழவு மாடுகள், கருவிகள்தட்டுப்பாட்டையும் தவிர்க்க முடியும். முன்பேஉழவு செய்த நிலத்தில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாக இருக்கும். இதனால்காலதாமதம் தவிர்க்கப்படுகின்றது.
கோடை உழவிற்கேற்ற காலம்
மானாவாரி பயிர் அறுவடை முடிந்தவுடன் மார்ச் (மாசி/பங்குனி) மாதத்தில்கோடை உழவு ஆரம்பிப்பதே உரிய காலம் ஆகும். முதல்உழவு சட்டிக்கலப்பை கொண்டும், மறுஉழவு கொத்துக்கலப்பை கொண்டும் உழுவது சிறந்தது. இதனால்அடிமண் இறுக்கம் நீக்கப்படுவதுடன் நீர் கொள்திறனும் அதிகரிக்கின்றது. விளைச்சலும்20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
"வருமுன்னர்க் காவாதான்வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்"
என்பது வள்ளுவன் வாக்கு.
இந்த வாக்கு மானாவாரி விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமாகும். வறட்சிவருமுன்னரே நிலத்தைப் பண்படுத்தி மண் ஈரம் காக்காவிட்டால் பின்வரும் நிறைவான விளைச்சலைப் பெற முடியாது. எனவேமண் ஈரக்காப்பு முறைகளை வேளாண் பெருமக்கள் அனைவரும் அறிந்து கொள்வதுடன் அவற்றை நம் நிலங்களில் மேற்கொள்வது மிகவும் அவசியம்.
மண் ஈரக்காப்பு உளவியல் தொழில் நுட்பங்கள்
பகுதிப்பாத்தி அமைத்தல்
மானாவாரி நிலங்களில் பகுதிப்பாத்தி அமைத்தல் சிறந்த ஈரக்காப்பு முறையாகும். இந்தமுறையில் நிலங்களை 8க்கு5 மீ. என்ற அளவில் சிறுசிறு பாத்திகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்தசிறுபாத்திகள் ஒவ்வொன்றும் சிறு சிற்றணைகளாகச் செயல்பட்டு பாத்தி பரப்பில் பெய்யும் மழை நீரை நீண்ட காலத்திற்கு தேக்கப்பட்ட நீர் தேக்கி வைக்கிறது அனைத்தும் மண்ணுள் உறிஞ்சப்படுவதால் நிலத்தடியில் நீர் கொள்திறன் அதிகமாகின்றது. இத்தகையபாத்தி அமைப்பது, நிலவளம்மேம்படுவதுடன், பயிர்விளைச்சலும் 20 சதவிகிதம்அதிகரிக்கின்றது என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பாத்திகள்அமைக்க ஏக்கருக்கு ரூ.500 முதல்G.720 இசை செலவை விட செலவாகிறது பன்மடங்கு கூடுதல் விளைச்சல் கிடைப்பதால் இம்முறை நல்ல பயனை அளிக்கிறது. மானாவாரியில்உழும் போதே இப்பாத்திகளை அமைத்து விடலாம். பார்அமைக்கும் கருவியைப் பயன்படுத்தி பார் அமைப்பதால் 50 சதவிகிதம்செலவைக் குறைக்க இயலும் விதைப்பு மேற்கொள்ளும் இடங்களில், முன்பருவவிதைப்பிற்குப்பின் இப்பாத்திகளை அமைத்தால் மழைநீர் முழுமையாக பயிர் விளைச்சலுக்கு முறையாகப் பயன்படுகிறது. இத்தகையபகுதிப் பாத்தி அமைத்து பயிர் சாகுபடி செய்வதால் நல்ல பலனை முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தில்வெடிப்புகளும் தோன்றுவதில்லை. முதல்கைக்களை எடுக்கும்போது மண் மூட் டமிடப்பட்டு வெடிப் புகள் ஏற்படாமல் காக்கிறது.
ஆழச்சால் அகலப்பாத்தி
"அகல உழுவதைவிட ஆழ உழுவதேமேல்" என்பது முதுமொழி.ஆழ உழுவதால் மண் இறுக்கம் நீக்கப்பட்டு நல்ல காற்றோட்டமுண்டாகி, நீர்ஆழமாக உறிஞ்சப்படுவதால் நல்ல பலன் கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை. இதைப்போல்மானாவாரியில் மண் ஈரம் காக்க, ஆழச்சால்அகலப்பாத்தி அமைப்பதும் நல்ல பலனை அளிக்கிறது. மானாவாரிநிலங்களில் ஆழச்சால் அகலப்பாத்தி அமைக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நவீன கருவி வடிவமைக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது. 1.5 மீட்டர்இடைவெளியில் சரிவுக்குக் குறுக்கே 30 செ.மீ. ஆழச்சால் அமைப்பதன் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடியில் ஈரம் காக்கப்படுகிறது. தற்போதுமுன்பருவ விதைப்பையும் இந் ஆழச்சால் அகலப்பாத்தியில் செய்ய முடியும். இதற்கும்நவீன பல்நோக்கு விதைக்கும் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால்விதைக்கும் செலவும் கணிசமாக குறைகிறது இவ்வாறு ஒவ்வொரு ஈரக்காப்பு முறைகளுக்கும் நவீன வேளாண்மை கருவிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதால் சாகுபடி செலவீனங்களைக் கணிசமாக குறைக்க இயலும்.
மண் மூட்டமிடுதல்
மானாவாரியில் மண் முட்டமிடுதல் ஒரு சிறந்த முறை என்பதில் ஐயமில்லை. மண்ணின்மேற்பரப்பில் கம்புத்தாள், சோளத்தட்டை, நிலக்கடலைத் தோல் தென்னை நார்க்கழிவு மற்றும் வேர்த்தட்டை போன்ற வேளாண்மைக் கழிவுகளை பரப்பிவிடுவதால் மண்ணிலிருந்து நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. இதனால்மண் ஈரம் காக்கப்படுவதுடன் அங்கக உரங்களாகவும் மாறி பயிருக்குப் பயன்படுத்தப்படுகின்றது. பல்கலைக்கழகஆய்வு மேற் கூறிய கழிவுப் பொருட்களை பயன்படுத்தியதில் பயிர் விளைச்சல் முதல் 15 சதவிகிதம்அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மண் மூட்டமிடுவதால் மண்ணரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதுடன் மழைநீர் நேரடியாக மேல் மண்ணை நீக்குவதையும் தவிர்க்கலாம்
தாவர அரண்
மாறிவரும் சூழ்நிலையில் மாற்றமாக தாவர வட்டமைப்புகளுக்கு அரண்கள் அமைக்கப்படுகின்றன. தாவரஅரண்கள் என்பது சாகுபடி பயிர்களின் இடையே இரண்டு அல்லது மூன்று வரிசை புல் வகைகள் மற்றும் அடர்ந்து வளரும் தன்மையுடைய தாவரங்கள் வளர்ப்பதாகும். தற்போதுநடப்பில் வெட்டிவேர், கொழுக்கட்டைப்புல், சூபாபுல், வேலிமசால் மற்றும் எலுமிச்சம் புல் போன்றவை தாவர அரண்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவுமற்றும் பயிரிடப்படும் பயிர்களுக்கேற்ப இந்த தாவர அரண்களுக்கிடையே உள்ள இடைவெளி மாறுபடுகின்றது. 15 மீட்டர்முதல் 20 மீட்டர் வரை இந்த இடைவெளி அமைகிறது. மானாவாரியில்இத்தாவர அரண்கள் மண்ணை அணைத்து மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
பண்ணைக் குட்டைகள்
இவற்றிற்கு மேலாக பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலம் சேகரிக்கப்படும் மழை வறட்சி மூலம் பயிர்களுக்கு காலங்களிலும் இக்கட்டு நிலைகளிலும் ஓரிரு பாசனங்கள் அளித்து வறட்சியின் பாதிப்பில் இருந்து பயிர்களை காக்கும். வறட்சிக்காலத்திலும், நிலையானவிளைச்சலைப் பெற பண்ணைக் குட்டைகள் மிகவும் உதவுகின்றன மேலும் பண்ணை குட்டைகளில் சேகரிக்கப்படும் நீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும், மருந்துதெளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளில் கம்பு, பருத்தி, சூரியகாந்திப் பயிர்களில் துணை நீர்ப்பாசனம் செய்த நிலங்களில் அதிக விளைச்சல் கிடைக்கப் பெற்றது இத்தகைய வேளாண்மை தொழில் நுட்பங்களை மேற்கொண்டு மண்ணரிப்பைத் தடுத்து மண் ஈரம் காத்திட நாம் முனைவோர் என்றால், வறட்சியிலும்பசுமைப்புரட்சியடைந்து, நல்லவிளைச்சல் பெற்று நாட்டுக்கு நன்மை பயப்பதுடன் நமது வீட்டிற்கும் அதிக வருமானம் பெற முடியும்.
- காணி தேடினும் கரிசல் தேடு
- கரிசல் நிலத்தில் காக்கும் ஈரம்
புழுதி வயலில் நெல் சாகுபடி
கோடை மழையை பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று முறை கோடை உழவு செய்து, களைகளைவெகுவாகக் கட்டுப்படுத்த வேண்டும். சட்டிக்கலப்பை கொத்துக் கலப்பை மற்றும் ரோட்ட வேட்டர் மூலம் சீராக மேடுபள்ளங்கள் செய்து இல்லாமல் நன்கு உழவு செய்து சமன்படுத்த வேண்டும் நீர்ப்பாசன வசதிக்கு ஏற்ப நன்கு சமன்படுத்தப்பட்ட நிலத்தை சிறு, சிறுஅமைத்துக் கொள்ளலாம்.
புழுதி வயலில் நேரடி நெல் விதைப்புக்கு பெரும் சவாலாக இருப்பது
ஒரு பக்க இரும்பு கலப்பை (மேலூர்கலப்பை) - ரூ.460
இரும்பு கலப்பை - ரூ.720
பார் கலப்பை - ரூ.980
பரம்பு பலகை - ரூ.1080
களைகள். இதனால்சுமார் 60 முதல் 70 சதவிகிதம்வரை விளைச்சலில் இழப்பு ஏற்படுகின்றது இசை சாகுபடி முறையில் குறைந்தப்பட்சம் 50 நாட்கள்வரை களைகள் இல்லாத சூழல் மிகவும் அவசியம். புழுதிவயலில் நேரடி நெல் விதைப்புக்கு மொத்த நீர் தேவை 650 மி.மீ. ஆகும்
மண்ணின் மேற்பரப்பில் சொட்டு நீர்ப்பாசனம் / தெளிப்பு நீர்ப்பாசனம்
புழுதி வயலில் நேரடி நெல் விதைப்பில் நெல்லின் பயிர் வளர்ச்சியைப் பொருத்து களிமண் நிலங்களுக்கு 125 சதவிகிதம்திறந்த தொட்டி நீர் ஆவியாதல் (Pan Evaporation - PE) / மணல் சார்ந்த மண்ணுக்கு 150 சதவிகிதPE சொட்டு நீர் (அ) தெளிப்பு நீர்ப்பாசனத்தை 180 செ.மீ பக்க வாட்டுடன் திட்டமிடல் மிகவும் சிறந்தது.
டிராக்டர் - ரூ.250
சட்டி கலப்பை - ரூ.250
டிரெய்லர் - ரூ.350
இரும்பு வரிசை கலப்பை - ரூ.250
அரைவட்ட சட்டி கொத்து - ரூ.250
இந்த இயந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைக்கக் கூடிய கலப்பை மற்றும் கொத்துகளை பயன்படுத்தி கோடையில் மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கலாம்.
Incoming
Search Terms:
கோடை உழவு,உழவு,உழவுப் பணி,இலவச உழவு,உழவுத் தொழில்,கோடைக்கு ஏற்ற காய்கறிகள்,செங்கரும்பு சாகுபடி,சம்பா பருவ நெல் ரகங்கள்,சம்பா நெல் வகைகள் எத்தனை,தர்பூசணி பயிரிடும் முறை,சம்பங்கி சாகுபடி,சம்பா பட்டத்தில் எந்த வகை நெல்களை பயிரிடலாம்,நாட்டு மாடு இனங்கள்,நாட்டு ரகங்களை பாதுகாத்து வரும் திருப்பூர் பிரியா,கேழ்வரகு பயிரிடும் முறை,சாமந்தி பூ பயிரிடும் முறை,பட்டம் பார்த்து பயிர் செய்,பாரம்பரிய,நெல் பருவம்,மேட்டுப்பாத்தி கட்டும் முறை,சம்பா பட்டம்,சம்பா பருவம்
kodai
ulavu,kodai uzavu,today tamil news,today headlines in tamil,today headlines
news in tamil,kodaikanal,verkadalai,kadalai
mittai,kalapai,velanmai,kodaikanalfarmer,verkadalai chutney,nilakadalai
valarpu,verkadalai benefits,nilakadalai chutney,nilakadalai
sagupadi,nandakumarkodaikanal,nilakadalai vivasayam,verkadalai chutney in
tamil,food,modern agriculture,eelam,foods,quail,black gram
cultivation,palani,pallan,mallan,cholan
organic
farming,farming,what is organic farming,organic,organic food,how does organic
farming work,organic farming in south africa,natural farming,in organic
farming,why organic farming,sustainable farming,local organic farming,jadam
organic farming,is organic farming good,how to do organic farming,types of
organic farming,organic farming methods,organic farming in japan,what is
organic,what is organic farming?,organic farming explained
agriculture,agriculture
business in tamil,agriculture technology projects in tamil,agriculture
technology in india tamil,how to pass agriculture officer in tamil,agriculture
technology learn it in tamil,how to become agriculture officer in
tamil,agriculture information technology in tamil,tamil agriculture,agriculture
tamil,tamil news,tamil agriculture business,agriculture in india,agriculture in
indonesia,agriculture technology tamil