Hot Widget

Type Here to Get Search Results !

Ads

Mohandas Karamchand Gandhi (மகாத்மா காந்தி) - Mahatma Gandhi History in Tamil


Mohandas Karamchand Gandhi (மகாத்மா காந்தி) - Mahatma Gandhi History in Tamil


இசுரேல்-எகிப்து நாடுகளுக்கிடையே கடும் போர் நடந்த நேரம். அமெரிக்க இதழ் இபான் ஆசிரியர் இசுரேலுக்குச் சென்றார். விடியற்காலை மணி இரண்டு. கட்டடங்களின்மேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. தாம் தங்கியிருந்த இல்லத்தில், அந்நிலையிலும் ஓர் இளம் பெண் ஒரு நூலை விரும்பிப் படித்துக்கொண்டிருந்தார். அதனைக் கண்டு வியப்புற்ற இபான் ஆசிரியர், அந்நூலை வாங்கிப் பார்த்தார். அது, காந்தியடிகளின் சத்திய சோதனை. "இந்த நேரத்தில் குண்டுகளுக்கிடையே இந்நூலை ஏன் இருக்கின்றாய்?" என்றபோது, அந்தப் பெண்ணின் மறுமொழி, "இதில்தான் உலகம் உய்ய உற்றவழி இருக்கிறது'' என்றார். உலகில், இன்று காந்தியடிகள் இல்லை. ஆனால், அவர் விட்டுச்சென்ற காந்தியக் கொள்கைகள் இன்றும் உலகை வழிநடத்திச் செல்கின்றன.

விளையும் பயிர்

காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது, குஜராத்திப் பாடல் ஒன்றனைக் கேட்டார். தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவனுக்கும் நன்மையே செய் என்ற பொருண்மை உண்டு என்ற அப்பாடல் இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை அவருள் விதைத்தது. அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது சிரவண பிதுர்பத்தி என்ற ஒரு நாடக நூலைப் படித்தார். அதில் சிரவணன் என்ற இளைஞன் பார்வையற்ற தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் ஒரு காட்சிப்படம் இருந்தது. அதனைப் பார்த்தது முதல், தாமும் பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்.

அரிச்சந்திரன் நாடகம் காந்தி ஒருமுறை பார்த்தார். உண்மையை மட்டும் பேசும் அரசன் அரிச்சந்திரனை ஒரு பொய் பேசவைக்கவேண்டும் என்பதற்காகவே பல இன்னல்களுக்கு உள்ளாக்குகிறார் முனிவர் விசுவாமித்திரர். அதனால், அரிச்சந்திரன் நாட்டையும் மனைவியையும் ஒரே மகனையும் இழக்கிறான்; சுடுகாட்டில் பணிபுரிகிறான். முனிவர் பல்வேறு இன்னல்களை இழைத்தும், "பொய் சொல்லுங்க" என்று மறுமொழி கூறினார். அவனது வாய்மையை நாடகம் வாயிலாக உணர்ந்த காந்தி, தாம் ஒரு சத்தியவானாக இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

ஒருமுறை இயேசுநாதரின் மலைச்சொற்பொழிவைப் பற்றிய நூலைப் படித்தார். தீயவனை எதிர்க்காதே; அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு என்னும் கருத்துகள், அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. பகவத்கீதையைப் படித்ததன் மூலம் மனவுறுதியைப் பெற்றார். உருசிய அறிஞர் தால்சுதாய் எழுதிய, உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூல் அவருள் தாக்கத்தினை ஏற்படுத்தியது. தால்சுதாய், தம் நூலில் "இன்னா செய்தார்க்கும்என்னும் திருக்குறளையே மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அதனைப்படித்த காந்தியடிகள் திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்று கொண்டார். அன்பு, உண்மை , உறுதி, இன்னா செய்யாமை ஆகிய உயர் பண்புகள் அவருக்கு இளம்பருவத்திலேயே இயல்பாய் அமைந்தன.

அறவழி விடுதலைப்போர்

போராட்ட முறைகள் இருவகைப்படும். ஒன்று, போர்முறையில் உரிமையை நிலைநாட்டுவது; மற்றொன்று, அறவழியில் உரிமைப்போர் செய்து வெற்றி பெறுவது. இவற்றுள் அறப்போர் முறையை காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார். "மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும் வழிமுறைகளும் என்றார் அவர்.

ஆங்கிலேயரைத் துன்புறுத்தி விடுதலை பெறுவதனைவிட, அமைதியான முறையில் அவர்களை எதிர்த்து, மனம் மாறச்செய்து விடுதலை பெறுவதே சிறந்தது என்றார். நேதாஜி போன்றோர் போர்முறையைக் கையாண்டுதான் விடுதலை பெறமுடியும் என்றபோது காந்தி, "வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது" என்று கூறினார். நெருப்பை நீரால்தான் அணைக்கமுடியும். வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில்தான் தடுக்க முடியும். அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும் என்று, அவர் எடுத்துக் கூறினார்.

வலிய போரில் சாகின்றவர்களின் எண்ணிக்கையைவிட, அறவழிப்போரில் இறப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், மற்ற உலக நாடுகள் இதனை ஏற்காவிடினும் இந்தியா அதனை ஏற்றுநடத்தி, ஏனைய நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழவேண்டும் என்றும் விரும்பினார். இந்த வழியை உலகுக்கு எடுத்துக் காட்டவேண்டியது இந்தியரின் கடமை என்றார் அவர். காந்தியடிகளின் அறவழிப் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது; (கதர் இயக்கம், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய இயக்கங்கள் பரவின.

எளிமை ஓர் அறம் 

மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர் காந்தியடிகள் என்பது உலகறிந்த செய்தி. ஒருமுறை தம் மனைவி கஸ்தூரிபாய் காந்தி, ஆசிரமத்திற்கு வாங்கிய காய்கறிகளில், வழக்கத்திற்கு அதிகமாக ஓர் அணா செலவு செய்ததற்குக் காந்தியடிகள் கடிந்துகொண்டார். ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தனர். கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார். தம் கழிவுகளை வேறு ஒருவர் அகற்றவிடாமல் தாமே அகற்றினார்; எழுதித் தேய்ந்த ஒரு பென்சிலாக இருந்தாலும், அதனை இழக்க மனம் வராமல் தேடுவார்; சிறு காகிதத்தையும் வீணாக்காமல் அதில் கடிதங்களுக்கு மறுமடல் எழுதுவார். அவர் விரும்பியிருந்தால், அரச வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால், எளிமையை ஓர் அறமாகப் போற்றிய அவருடைய மனம், அதற்கு இடம் தரவில்லை ; பகட்டான வாழ்க்கை பாவம் என்று கருதினார் அண்ணல் காந்தியடிகள்.

காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதைக் கண்டார். தாமும் அன்றுமுதல் மேலாடை அணிவதனை நிறுத்திக்கொண்டார். அரையாடையுடன் இங்கிலாந்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, அப்போதைய இங்கிலாந்து முதன்மையமைச்சர் சர்ச்சில், அரை நிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தபோதும், காந்தியடிகளின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

காந்தி, காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் திறப்புவிழாவிற்கு மன்னர்களையும் செல்வர்களையும் பார்த்துக், “கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் இல்லாமல் தவிக்கும் இந்த நாட்டில், இன்னும் உங்களில் பலர் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அணிகலன்களை அணிந்துகொண்டு பகட்டாக வாழ்வது பாவமல்லவா? ஏழைமக்களின் காவலர்களாக இருக்கவேண்டிய நீங்கள் இப்படி செய்வது ஏய்த்துப் பிழைக்கும் செயல் அல்லவா? என்றும் கேட்டார். ஏழையரின்பால் அவ காட்டிய பரிவும் போற்றுதற்குரியதாகும்.

மனிதநேயம்

மனிதரோடு மனிதராக வாழ்ந்து, மனிதருக்காக வாழ்ந்து, 'மகாத்மா'வாக உயரமுடியும் என்பதனை மெய்ப்பித்தவர் உலக உத்தமர் காந்தியடிகள். மனிதனின், பெருமையை மனிதனுக்கு உணர்த்தி, எளியவர்களிடம் மறைந்திருக்கும் அருமையை உணர்த்தி அவர்களை வரலாற்று நாயகர்களாக மாற்றியவர் காந்தி,

"என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்றுதான். நம் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான்" என்று அவரே கூறுகிறார். அவர் இராமனைப் போற்றியதற்குக் காரணம், அவன் மனிதனாகப் பிறந்து, மனிதப் பண்புகளால் உயர்ந்து, மானுடரோடு மற்ற உயிரினங்களையும் உடன்பிறந்தவர்களாக ஏற்று, உலகம் உய்ய வழி காட்டியதால்தான்.

மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்த்தப்படுவதனைக் காட்டிலும், மனிதத்தன்மையால் பிறருக்கு உணர்த்தப் பெறுவது சிறப்பு. சான்றாக, நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலக நிலையில் உலகம்; ஆனால், மனிதனாக இருத்தல் வேண்டும். குஜராத்தியனாக இருப்பதனைக் காட்டிலும், இந்தியனாக இருப்பதனைக் காட்டிலும், மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ணவேண்டும்" என்று விழைந்தார் காந்தியடிகள். அவ்வாறு, “உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்" என்றார் அவர்.

இன்னா செய்யாமை 

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக் காந்தியடிகள் கொளுத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவர் செருப்புத் தைத்தார். முதல் இணைச்செருப்பே சிறப்பாக அமைந்தது. அதனை யாருக்காவது அன்பளிப்பாக அளிக்க விரும்பினால். அவர் நினைவிற்கு வந்த முதல் மனிதர் ஸ்மட்ஸ். அவர் காந்தியடிகள் சிறையிலடைத்த ஆளுநர். சிறையிலிருந்து விடுதலையானதும் ஸ்மட்ஸை சந்தித்துத் தாம் தைத்த காலணிகளை வழங்கினார். அதற்கு ஈடாக ஸ்மட்ஸ், காந்திக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தார். அவற்றைப் பொன்னேபோல் போற்றித் தம்முடனே வைத்துக்கொண்டார் காந்தியடிகள்.

1948 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முப்பதாம் நாள் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகமே இரங்கல் செய்தி விடுத்தது. ஸ்மட்ஸ் தம்முடைய இரங்கல் செய்திகள், "காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே, அதனை எடுத்துச்சென்று என் பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன் என்று குறிப்பிட்டார்.

இளைஞர்களின் கடமை

நாட்டில் வளர்ந்து வரும் அனைத்து வறுமை நிலைகளையும் ஆராய்தல் வேண்டும். இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று, தெய்வப்பற்று, மொழிப்பற்று வளரும்வகையில் கல்வி அமைதல் வேண்டும். வடு அமைவம் நமது நாட்டிற்கே உரிய கிராமத் தொழில்களும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்க்க இளைஞர்கள் முன்வருதல் வேண்டும். இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான்; அந்தக் கிராமங்களின் வாழ்வு, அந்த நாட்டின் உழவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கைகளில்தான் உள்ளது என்றார் காந்தியடிகள்.

"தன்னாட்டு பொருள் இயக்கம் சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரிய" என்று கூறினார். வளர்ந்து வரும் வெளிநாட்டவர் பொருள் வரவேற்கத் தக்கதன்று என்று கண்டித்தார்.

ஆங்கிலேயரின் மேலாண்மை மூலம் நாம் அடைந்த அடிமைத்தனம் மிகமிக இழ இதனை நம்நாட்டு இளைஞர்கள் விளங்கிக்கொள்ளும்வகையில் எடுத்துக் கூறுதல் வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்குமாறு இளைஞர்கள் கேட்டுக்கொண்டார். கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை என்றார்.

ஈகைச் சிகரத்தின் உச்சியில் நின்றவர் காந்தியடிகள். அவருடைய வாழ்வு முழுவதும் ஈகந்தான் (தியாகம்) நிறைந்திருந்தது. உப்புக்காக, உரிமைக்காக, ஒற்றுமைக்காக, சமத்துவத்திற்காக, வன்முறைக்கும் தீண்டாமைக்கும் எதிராகத் தொடர்ந்து போராடியவர் காந்தியடிகள்.

வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களையும் சமூகநீதிக்கான போராளிகளாக ஆக்கியவர் அவர். இறுதியில் தன்னுயிரை நாட்டுக்காக ஈந்து அமரவாழ்வு பெற்றுவிட்டார். உலக உத்தமர் காந்தியடிகள், உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகத்தார் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கிறார்.

Incoming Search Terms:

  • மகாத்மா காந்தி
  • மகாத்மா காந்தி ஜி
  • மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு
  • மகாத்மா காந்தி ஜி பற்றிய வரிகள் தமிழில்
  • மகாத்மா காந்தி ஜி பற்றிய 10 வரிகள் தமிழில்
  • மகாத்மா காந்தி வரலாறு
  • மகாத்மா காந்தி படுகொலை
  • மகாத்மா காந்தி கட்டுரை
  • மகாத்மா காந்தி ஜி வரிகள்
  • மகாத்மா காந்தி thug life
  • மகாத்மா காந்தி வரலாறு தமிழ்
  • மகாத்மா காந்தி பொன்மொழிகள்
  • மகாத்மா காந்தி தமிழ் பொன்மொழிகள்
  • காந்தி
  • மகாத்மா காந்தியை பற்றிய கட்டுரை
  • மகாத்மா காந்தி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
  • காந்தி வரலாறு
  • மகாத்மா

mahatma gandhi,life history of mahatma gandhi in tamil,mahatma gandhi story,mahatma gandhi life story,mahatma gandhi history in tamil,mahatma gandhi story in tamil,gandhi story in tamil,life history of mahatma gandhi,gandhi history in tamil,mahatma gandhi history,mahatma gandhi story for kids,gandhi,the story of mahatma gandhi,gandhiji history in tamil,mahatma gandhi life story for kids,mahatma gandhi biography,mahatma gandhi essay in tamil

mohandas karamchand gandhi,mahatma gandhi,gandhi,mohandas gandhi,mohandas karamchand gandhi speech,mahatama - mohandas karamchand gandhi,mohandas karam chand gandhi,mahatma gandhi story,mohandras gandhi,mahatma gandhi life story,gandhi jayanti,mohandas,mahatma gandhi history,gandhi speech,vida de gandhi,mahatma gandhi family,mahatma gandhi biography,mahatma gandhi (politician),mahatma gandhi assassination,life of mahatma gandhi,gandhi aasram 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad