பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் இலங்கையிலுள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் பதினேழாம் நாள் பிறந்தார். இவர், கோபாலமேனன் சத்யபாமா இணையருக்கு ஐந்தாவது மகனாவார். இவரது இரண்டாவது அகவையில் தந்தை காலமானார். வறுமையில் வாடிய இராமச்சந்திரன் உடைய குடும்பம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்குக் குடிபெயர்ந்தது சத்யபாமா, உங்கள் ஆனையடி பள்ளியில் தம்மக்கள் சக்கரபாணியையும் இராமச்சந்திரனையும் சேர்த்தார். எனினும், வறுமையினால் இருவரும் பள்ளிப்படிப்பைத் தொடரவில்லை .
இந்நிலையில், எதிர்பாராத விதமாக இருவருக்கும் நாடகத்துறையில் நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. தமது இளமைப்பருவத்தில், மேடை நாடகங்களில் நடித்து கொண்டிருந்த இராமச்சந்திரன், திரைப்படத்துறையில் ஈடுபட்டுச் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக் கதாநாயகனாக உயர்ந்தார். அவரது சுறுசுறுப்பும் உழைப்பும் படிப்படியாக அவரை உயர்நிலைக்கு கொண்டு சென்றன.
அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல், பழகும் பண்பு, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உண்மை , முதலியவற்றால் இராமச்சந்திரன் கவரப்பட்டார்.
இராமச்சந்திரன், நடிப்புக் கலையை யும் அரசியலையும் தமது இருகண்களாகக் கருதினார். தாம் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, நல்ல பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையப் பெருமுயற்சி எடுத்தார். இத்தகைய செயல்பாடுகள் படிப்பறிவற்ற பாமர மக்கள், எளியோர்கள், உழவர்கள், தொழிலாளர்கள் முதலியோரிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கடின உழைப்பே ஒரு நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்று ராமச்சந்திரன் நம்பினார்.
மக்கள் அவரை, புரட்சி நடிகர் என்றும், மக்கள் திலகம் என்றும் போற்றினர். அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக எம்.ஜி.ஆர். விளங்கியதனால், அவரை அறிஞர் அண்ணா , இதயக்கனி என்று போற்றினார்.
இராமச்சந்திரன் நடிப்புத் துறையில் மட்டுமன்றி அரசியலிலும் ஈடுபட்டார். இவர் 1963 ஆம் ஆண்டு, சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1972 ஆம் ஆண்டில், தாமிருந்த இயக்கத்திலிருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார். பதினோராண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகம் அவரது பணிகளை பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது. இந்திய அரசு, சிறந்த நடிகருக்கான பாரத் பட்டத்தை வழங்கி அவருக்குச் சிறப்புச் செய்தது.
எம்.ஜி. இராமச்சந்திரன் வறுமை, பசிக்கொடுமை ஆகிய இரண்டனையும் இளமையிலேயே உணர்ந்தவர். அதனால் அவர், பெருந்தலைவர் காமராசர் காலத்தில் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சத்துணவு வழங்கும் திட்டமாகச் செயல்படுத்தினார்.
புரட்சித் தலைவர் என்று மக்களால் போற்றப்பட்ட எம். ஜி. இராமச்சந்திரன் 24.12.1987 அன்று இயற்கை எய்தினார். எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களது உடல் சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிடத்திற்கருகே நல்லடக்கம் செய்யப்பட்டு, அவருக்கான நினைவகம் எழிலுற அமைக்கப்பட்டது.
அவர்தம் பணியைப் பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது (இந்திய மாமணி) 1988ஆம் ஆண்டு அவருடைய மறைவுக்குப் பின் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
"வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார்?"
என்னும் அவர் நடித்த திரைப்படப் பாடலுக்கு, அவரே சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
Incoming
Search Terms:
m g ramachandran,mgr history,mgr life history,life
history mgr,mgr life history in tamil,mg ramachandran,m. g. ramachandran
history,mg ramachandiran life history in tamil,m. g. ramachandran,janaki
ramachandran,history,janaki mgr history,mgr political history,admk former life
history,mgr life story,mgr life history in tamil wikipedia,m.g.r life
story,ramachandren,m. g. ramachandran son,m. g. ramachandran wife,janaki
ramachandran cm
- எம்.ஜி.இராமச்சந்திரன்
- எம்.ஜி.ராமச்சந்திரன்
- பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
- பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
- எம்.ஜி.ராமச்சந்திரன் வாழ்க்கை வரலாறு
- பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் எட்டாம் வகுப்பு
- எம்.ஜி.ஆர்
- எம்.ஜி.ஆர் தத்துவ பாடல்கள்
- எம்.ஜி.ஆர் பாடல்கள்
- எம்ஜிஆர் சிறந்த பாடல்
- எம்.ஜி.ஆர் தத்துவப்பாடல்கள்
- புரட்சிகரமான எம்.ஜி.ஆர் பாடல்கள்
- எம்ஜிஆர்
- நாம் தமிழர்
- எம்ஜிஆர் பாடல்
- தமிழ் செய்திகள்
- எம்ஜிஆர் பாடல்கள்
- 8ஆம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
- எட்டாம் வகுப்பு