Hot Widget

Type Here to Get Search Results !

Ads

தொன்மைத் தமிழகம் (Thonmai Tamizhagam)

 

தொன்மைத் தமிழகம் (Thonmai Tamizhagam)

 

தமிழ்நாடு தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது. முதல் மாந்தன் தோன்றிய இலெமுரியாவை மனித நாகரிகத் தொட்டில் என்பர். தமிழகம் இன்றுபோல் இல்லாது, குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து குமரிமலை பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது. இச்செய்தியைப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும். 

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள''

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், தமிழின் பழஞ்சிறப்பினைப் பெருமிதம் பொங்கப் பின்வருமாறு பாடுகிறார். 

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

 தமிழ் மொழியின் தொன்மை

தமிழினம் தனக்குவமையில்லா ஒரு தனி இனம். தமிழர் நாகரிகம் தன்னிகரில்லா நனி நாகரிகம். தமிழர் உணவு, உடை, விருந்து, ஈகை, பொறை, நடுவுநிலைமை, அருள் ஆகிய பண்புகளால் சிறந்திருந்தனர்; உழவையும், தொழிலையும் மதித்திருந்தனர்; வினையை ஆடவர் உயிராகக் கருதினர்; சான்றோனாதலே கல்வியின் முடிவெனப் போற்றினர்; விருந்தெதிர் கொண்டு வாழ்ந்தனர்; புகழெனில் உயிரும் கொடுக்க முனைந்தனர்; பழியெனில் இன்பம் கண்டனர் தமிழர் வாழ்ந்தனர்.

வணிகம்

பழந்தமிழ் நாட்டில் வாணிகம் வளர்ந்திருந்தது. தமிழர்கள், அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள். பொருள் தேடுவது ஒன்றனையே குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள். அவர்கள் கொள்வதும் மிகைகொளாது, கொடுப்பதும் குறைபடாது வாணிகம் செய்தார்கள்; உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருளீட்டினார்கள். நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, கொட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலிய பயறு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.

கடல் வாணிகம்

கடல் வாணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்; பொன்னும், மணியும், முத்தும், துகிலும் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்தனர். பண்டைத் தமிழகத்தில் துறைமுகப் பட்டினங்கள் பலவிருந்தன. பூம்புகார் முதல் பெருநகரங்கள், வணிகர் வாழும் இடங்களாய் இருந்தன. கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில் தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன. தமிழர்களுக்கு சாவக நாட்டுடன் கடல் வணிகத் தொடர்பு இருந்தது.

மொழித் தொன்மை

வரலாற்று ஆசிரியர் பெரும் கிறிஸ்தவ ஊழித் தொடக்கத்துக்கு முன்பு மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்திருக்கவேண்டும் என்று நவில்கின்றனர். தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்ற தனிநாயகம் அடிகள் கூற்று, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. தமிழ்கெழு கூடல் என்று புறநானூறு தமிழ்வேலி என்று பரிபாடல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தனையே குறிக்கின்றன. கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்' என்று திருவாசகமும் பழந்தமிழ்ச் சங்கத்தையும் சங்கமிருந்து தமிழாய்ந்ததனையும் குறிப்பிடுகிறது.

உலக நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பினைத் தமிழ்மொழி அளித்திருக்கிறது. உலகில் உள்ள உயரிய மனித இனத்தின் மரபுச் செல்வமாகத் தமிழ் மொழி விளங்குகிறது.

ஏற்றுமதியும் இறக்குமதியும்

பண்டைக் காலத்து வாணிகப் பொருட்கள் ஏற்றுமதியாயின. பட்டினப்பாலையும், துறைமுக நகரங்களில் இருந்து மதுரைக்காஞ்சியும் அவற்றை அழகுறக் கூறும் தம்பட்டினத துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பின்வரும் பட்டினப்பாலை வரிகள் விளக்கும்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் 

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

… … … 

மயங்கிய நனந்தலை மறுகு.

இசைக்கலை 

உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்துவிட்டதென்பர். மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று. பண்டைக்காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பெண்கள், இசைக்கருவிகள், இசை கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன. தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும்

இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன. 'நரம்பின் மறை' என்று தொல்காப்பியர் இருப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது.

மேலும் பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது. தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் இசை முதன்மை பெறுகிறது. தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப் பாடுவது. ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப்பற்றிப் பாடுவது.

இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே. பண்ணொடு தமிழொப்பாய் என்னும் தேவாரம், பண்ணும் தமிழும் பிரிக்க முடியாததொன்று என்று நவிலும், தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்; தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகள் பயன்படுத்தி இன்புற்றனர். குழலினிது யாழினிது என்று இசை பொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது. இதன்மூலம் தமிழிசை தொன்மையும் சிறப்பும் பெற்றிருந்ததனை அறியலாம்.

உழவுத் தொழில்

பழந்தமிழகத்தில் உழுபவரே உயர்ந்தோராக மதிக்கப்பட்டனர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பது திருக்குறள், தமிழர், உழுது பயிர் செய்து உலகைக்  காக்கும் இத்தொழிலைப் பெரிதும் போற்றினர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் அன்றைய புகழ்மொழி இன்றும் தமிழரால் போற்றப்படுகிறது. உழவுக்கு சிறப்புப் பெற்ற மருதநிலம் வயலும் வயல் சார்ந்த இடம் வகைப்படுத்தப்பட்டு இருந்தது. மருத நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்.

பழந்தமிழர் வாழ்வு

அறத்தின் அடிப்படையில் தொடங்கியது பழந்தமிழர் வாழ்வு; அறத்தின் வழியே பொருளைக் கண்டது; அவ்வறத்தின் வழியே இன்பத்தினை எட்டியது. அக்காலத்தே அறம், பொருள், இன்ப வாழ்வைத் தமிழர் பெற்றிருந்தனர். அறத்தினைக் கைக்கொண்டதனால் வீடு என ஒன்று வேண்டியதாயிற்று.

பழந்தமிழர் அன்பு வழியினர். அறத்துக்கே அன்பு சார்பு என்பதனை நன்கு உணர்ந்திருந்தனர். அன்பைப் போற்றியது போலவே வீரத்தினையும் ஏற்றிப் போற்றினர். 'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' என்னும் புறப்பாடல், வீரத்தினை முதற்கடமையாக்குகிறது. வீரமற்ற ஆடவரை அக்காலப் பெண்டிர் மணந்துகொள்ள விழையார். ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர், பெண்களின் பெருவீரத்தினைப் பாடுகிறார். முதல் நாள் போரில் தந்தையைப் பறிகொடுத்தாள். இரண்டாம் நாள் போரில் கணவனை இழந்தாள். மூன்றாம் நாள் போர் தொடர்கிறது. மறக்குடியில் பிறந்த மாண்புடையவள் அப்பெண். நெஞ்சம் துடித்த அவள், பால் மனம் மாறா சிறு மகன் தன்னைச் செருக்களம் நோக்கிப் பகைத்திறம் மாய்க்க விடுத்தாள். என்னே, அவள் துணிவு!

பண்டைத் தமிழரின் தொன்மை, மொழியின் பெருமையை, தொழில் வளத்தை, உழவின் சிறப்பை, நாகரிக வாழ்வை, அன்பின் திறத்தினை, வீரத்தின் மாண்பை அறிவோம்; தொன்மைத் தமிழகத்தின் பெருமையை உணர்வோம்.

Incoming Search Terms:

தமிழர் தொன்மை,தமிழின் தொன்மை tnpsc notes,தமிழ்க்குடி தொன்மை,தமிழ் மொழியின் சிறப்பு tnpsc,நியூஸ்7 தமிழ்,திராவிட மொழிக் குடும்பம் 9th தமிழ்,திராவிட மொழிகள் 9 th தமிழ்,திராவிட மொழிகள் பொதுத்தமிழ்,தமிழ்க்குடி,பேச்சுத் திருவிழா,ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்,education,magicbox animation,accel tv,motivation king,tamil motivational speech,whatsapp status,life motivation video|,i will progress in life,angry motivation whatsapp status tamil,murali dharan k

thonmai arivom,tamilin thonmai,tamil mozhiyin thonmai,thamizhthonmai,thamizharkalam,thamizinthondral,thamizhan raj,thamizsurabi,moondraamsangam,maze game,tamilin thonmai thamil mozhin sirapu dravida mozhikal thodarpana seithigal tnpsc,tet tamil online exam,#தொன்மை மறவேல் #thonmaimaravel,sumaithangi,madras tamil,tnpsc tamil online exam,chennai tamil semmozhi,tnusrb tamil online exam,organic tamil,muthalsangam,chennai tamil,aammii tharcharbu sandhai

tamilnadu tourism,tamilnadu,tamilnadu tourist places,tamilnadu 4k,#tamilnadu,bts army tamilnadu,modi tamilnadu visit,enchanting tamilnadu,tamilnadu travel vlog,tamilnadu travel video,tamilnadu famous sweets,tamilnadu election 2024,tamilnadu amazing facts,bts army tamilnadu edits,places to visit in tamilnadu,enchanting tamilnadu tourism,tamilnadu ke bare mein jankari,top tourist places in tamilnadu,tamilnadu top 10 tourist places,tamil nadu

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad