Hot Widget

Type Here to Get Search Results !

Ads

இறவை உளுந்து சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் (Ulunthu Sagupadi) - Organic Farming | Agriculture Tips in Tamil

 

இறவை உளுந்து சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் (Ulunthu Sagupadi) - Organic Farming | Agriculture Tips in Tamil


நம் அன்றாட உணவில் பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றுள் உளுந்து மற்றும் பாசிப்பயறு முக்கியமானவையாகும். இப்பயறுவகைகளில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், வைட்டமின்சி, ரைபோபிளேவின் மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளதால் இவை, புரதத்தின்ஆலைகள் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உளுந்து பயிர் சுமார் 3.74 லட்சம்எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. ஆண்டொன்றுக்கு 3.59 லட்சம் டன் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்சராசரி விளைச்சல் 960 கிலோ/எக்டர் என்ற அளவில் உள்ளது. உளுந்தில்உற்பத்தியை பெருக்க சிறந்த ரகம், தரமானவிதை, சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரித்தல், தேவையானஅளவு இடுபொருள் இடுதல் ஆகியவை மூலம் அதிக விளைச்சல் பெற வாய்ப்புள்ளது. அதிகவிளைச்சலுக்கு மிகவும் தேவைப்படுவது நல்ல விளைதிறன், பூச்சி, நோய், வறட்சி ஆகியவற்றை தாங்கி வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட ரகங்களாகும்.

பருவங்கள்

தை மற்றும் மாசி பட்டம், சித்திரைபட்டம். ஆடி மற்றும் புரட்டாசி பட்டம்.

இரகங்கள்

ஏட்டி 5. கோ6, வம்பன் , வம்பன் 4 வம்பன்5. வம்பன் வம்பன் 8.

விதை அளவு

இறவை: 8 கிலோ/ஏக்கர் 

நிலம் தயாரித்தல்

நில மேம்பாட்டிற்கு ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க் கழிவு இடவேண்டும்.

விதை நேர்த்தி

கார்பென்டாசிம் /திரம்2 கிராம் ஒரு நேரம் கழித்து விதைக்கவும் அல்லது ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம்அல்லது சூடோமோனாஸ் 10 கிராம்கொண்டு விதை நேர்த்தி செய்யவும். ஏக்கருக்குரைசோபியம் 200 கிராம்மற்றும் பாஸ்போபாக்டீரியா கிராம் உடன் ஆறிய அரிசி கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ரைசோபியம்பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்த விதையுடன் கலக்கக் கூடாது.

விதைப்பு

இறவையில் விதைகளை 30x10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல்தரிசில் பயிரிடுவதாக இருந்தால், அறுவடைக்கு5 முதல் 10 நாட்கள் இருக்கும் போது விதைகளை மண்ணில் தூவ வேண்டும். தூவும்போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்கும் பார்த்து கொள்வது அவசியம் வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஏக்கருக்கு 800 கிராம்ரைசோபியம், கிராம்பாஸ்போ பாக்டீரியா உடன் 20 கிலோதொழு உரம் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.

 இறவைப் பயிருக்கு, ஏக்கருக்கு10 கிலோ தழைச்சத்து (யூரியா21.7 கிலோ) 20 கிலோ மணிச்சத்து (சூப்பர்பாஸ்பேட் கிலோ), 10 கிலோசாம்பல் சத்து (பொட்டாஷ்17 கிலோ) மற்றும் 8.0 கிலோகந்தகச் சத்து (ஜிப்சம்45 கிலோ ) இடவேண்டும்.

விளைச்சலை அதிகரிக்க இலைவழி தெளிப்பாக 4 கிலோடை அம்மோனியம் பாஸ்பேட்டை (2%) 10 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அதன் தெளிந்த நீரை வடிகட்டி அதனுடன் 190 லிட்டர்தண்ணீர் சேர்த்து பூக்கும் தருணத்திலும், 15 நாட்கள்கழித்தும் தெளிக்கவேண்டும்.

நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 2.0 கிலோஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும்.

ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிக்க 1:10 என்றவிகிதத்தில் நுண்ணூட்டக் கலவை மற்றும் தொழு உரத்தை கலந்து ஒரு மாதம் நிழலில் உலர்த்த வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகுஉயிர்த்தண்ணீர் மூன்றாவது நாளும் பாய்ச்ச வேண்டும். காலநிலைமற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல்15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின்நிலைகளிலும் தண்ணீர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இலை வழியாக (NAA) மற்றும் சாலிசிலிக் அமிலக் கரைசல் தெளித்தல்

இலைவழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் நாப்தலின் அசிடிக் அமிலம் (Naphthalene Acetic Acid- NAA) 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லிகிராம் கலந்து, மீண்டும்200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் தருணத்தில், 15 நாட்கள்கழித்தும் தெளிக்க வேண்டும்.

.வே.. (TNAU) பயிறு ஒன்டர் தெளித்தல்

பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பயறு ஒன்டர் ஏக்கருக்கு 2 கிலோபூக்கும் பருவத்தில் தெளிப்பதன் மூலம் பூக்கள் உதிர்வது குறைந்து, வரட்சியைத்தாங்கி விளைச்சல் 20 சதவீதம்வரை அதிகரிக்கிறது.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

களை முளைப்பதற்கு முன் தலைக் கொள்கையாகக் பென்டிமெத்தலின், பாசனநிலையில் ஏக்கருக்கு 1.3 லிட்டர், மழை ஒரு லிட்டரை விதைத்த மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுண்குழல் கொண்ட கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

களை முளைத்த பின் தெளிக்கும் களைக்கொல்லியான இமாசிதைபர் ஏக்கருக்கு 200 மி.லி. விதைத்த 15-18 நாளில் தெளிக்க வேண்டும்.

பூச்சிக் கட்டுப்பாடு

பச்சைக் காய்த் துளைப்பான் அறிகுறிகள்

  • ஆரம்ப நிலையில் இலைகள் உதிரும்.
  • காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும் விட்டு, உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும்.
  • காயைச் சுற்றி வட்ட வடிவ துளைகள் இருக்கும்.

புள்ளி காய்ப்புழு 

அறிகுறிகள்

  • மொட்டுக்கள், பூக்கள், காய்களில் துளைக்குழிகள் காணப்படும்
  • தாக்கப்பட்ட காய்களில் பூச்சிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வலைப் பின்னியிருக்கும்.

முள்ளு காய்த் துளைப்பான்

அறிகுறிகள்

  • பூக்கள் மற்றும் இளம்காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.
  • முதிர்ந்த காய்களில் புழு நுழைந்தஇடத்தில் பழுப்பு நிற புள்ளியுடன் காணப்படும்.

கட்டுப்பாட்டு முறைகள்

  • இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சியின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
  • ஏக்கருக்கு 20 பறவைத் தாங்கிகள் என்ற அமைக்கவும்.
  • வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
  • கீழ்க் காணும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஏக்கருக்கு 250 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் தூவவும்.
    • இன்டோக்சாகார்ப் 135 மி.லி.
    • மி.லி மி.லி டைகுளோர்வாஸ் 250 மி.லி.
    • கார்பரில் 5 சதத்தூள் 10 கிலோ

புகையிலைப் புழு

  • இசை இலைகளை கடித்து தின்னும் வகையான பூச்சியாகும். வளர்ச்சி  அடைந்த நிலையில் பூக்கள் மற்றும் காய்களையும் கடித்து தின்று சேதத்தை விளைவிக்கும்.
  • கீழ்க் காணும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஏக்கருக்கு 250 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
    • குளோர்பைரிபாஸ் 500 மி.லி.
    • இன்டோக்சாகார்ப் 150 மி.லி
    • டைகுளோர்வாஸ் 400 மி.லி
    • கார்ப்ரில் 5 சதத்தூள் 10 கிலோ
    • நச்சுணவு வைத்தும் இப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.
    • ஏக்கருக்கு 5 கிலோ அரிசி தவிடு 500 கிராம் நாட்டுச் சர்க்கரை, 500 கிராம் கார்பரில் தூள் மற்றும் லிட்டர் தண்ணீர் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கி மண்ணிலிருந்து புழுக்கள் வெளிவரும் மாலை நேரங்களில் வயல்களில் ஆங்காங்கே  வைப்பதன் மூலம் இப்பூச்சி இந்த நச்சுணவினை உண்டு இறந்துவிடும்.

வெள்ளை

அறிகுறிகள்

இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

தாய்ப்பூச்சிகள்

சிறியதாக, மஞ்சள்நிற உடலுடன் வெள்ளை நிற இறக்கைகளுடன், உடலைச்சுற்றி மெழுகுப் போன்ற பொடியுடன் காணப்படும் இளம் பூச்சிகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் கருப்பு நிறத்தில் வட்ட கோள வடிவில் விளிம்பில் நிறைய ரோமங்கள் காணப்படும்.

கட்டுப்பாட்டு முறைகள்

  • ஏக்கருக்கு 5 இடங்களில் மஞ்சள் ஒட்டு பொறி வைத்து அழிக்கலாம்
  • ஏக்கருக்கு அசாடிராக்டின் (10000 ppm) 500 மி.லி அல்லது மித்தைல் டெமட்டான் 25 .சி 200 மி.லி அல்லது டைமெத்தோயேட் 30 .சி மி.லி. அல்லது பாஸ்போமிடான் 85 WSC 250 தயாமீத் தாக்சாம் மி.லி 50 200 லிட்டர் தண்ணீர் அல்லது கிராம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

Incoming Search Terms:

உளுந்து சாகுபடி,உளுந்து சாகுபடி செய்வது எப்படி,வம்பன் ரகம் உளுந்து சாகுபடி செய்வது எப்படி,இறவை சாகுபடி லாபம் தருமா,உளுந்து எத்தனை நாள் பயிர்,உளுந்து,உளுந்து - kvk,உளுந்து உரமிடும் முறை,மணிலா சாகுபடி,மானவாரி சாகுபடி குறித்து,நல்ல லாபம் தரும் மானாவரி சாகுபடி,மானவாரி சாகுபடி,மானவாரி சாகுபடி என்றால் என்ன,வேளாண்மை அறிவியல் நிலையம் அருப்புகோட்டை,வேளாண்மை அறிவியல் நிலையம் விருதுநகர்,வேளாண்மை அறிவியல் நிலையம் விஜயலட்சுமி,மணிலா,வேர்கடலை,black gram

ulunthu sagupadi tamil,ulunthu sagupadi seivathu eppadi,ulunthu sagubadi in tamil,uluntu iyarkai murai sagubadi,ulunthu pattam,ulunthu,ulunthu vadai,#ulunthu,ulunthu vithaipathu eppadi,ulunthu payiridum murai,dosai ulunthu,masai pattam ulunthu,ulunthu aruvadai seivathu eppadi,ulunthu farming in tamil,ulundhu,ulunthu cleaning process,ulunthu vivasayam in tamil,ulunthu vithai muthal aruvadai varai,ulundhu tips in tamil,kaikarigal sagubadi,idly ulundhu

organic farming,farming,organic,what is organic farming,organic food,how does organic farming work,organic farming in south africa,natural farming,in organic farming,sustainable farming,best organic farming,local organic farming,jadam organic farming,organic farming in usa,is organic farming good,types of organic farming,organic farming methods,how to do organic farming,what is organic,why organic farming is good,benefits of organic farming

agriculture,tamil agriculture tips,agriculture tamil,nammalvar agriculture in tamil,brinjal cultivation in tamil,news in tamil,iot in agriculture,vivasayam in tamil,eb free service for agriculture in tamilnadu,free eb connection for agriculture in tamilnadu,crop management in agriculture,ennai kathirikai varuval in tamil,microgreens in tamil,nammalvar speech in tamil,tamil news,low investment more profits plants in agriculture

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad