Hot Widget

Type Here to Get Search Results !

Ads

அயோத்திதாசப் பண்டிதர் (Iyothee Thass)

 

அயோத்திதாசப் பண்டிதர் (Iyothee Thass)



"உள்ளத்தால்பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள்எல்லாம் உளன்".

                                                              - குறள், 294

  என்கிறது வான்மறை. எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் இணைந்து, எல்லாரும்எல்லாமும் பெறவேண்டும் என்னும் நற்சிந்தனை மலர அரும்பாடுபட்டவர்களை நாம் சமூகச் சீர்திருத்தவாதிகள் என்கிறோம்.

கூடிவாழும்இக்குவலயத்தில் எத்துணைஏற்றத் தாழ்வுகள்! சாதியால், மொழியால், மதத்தால், இனத்தால், நிறத்தால்உலகம் மாறுபட்டுக்கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டபோது, ஞானஒளியாய் இந்நானிலத்தில்உரிமைக்குக் குரல்கொடுத்த நல்லோர்களையேநாம் சீர்திருத்தச்செம்மல்கள் எனச்சிந்தை மகிழப்பாராட்டு கிறோம். அத்தகையவரிசையில் ஏறக்குறையநூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில்பிறந்து, மாபெரும் மாற்றங்கள்நிகழ்வதற்கு வித்திட்டவரேகாத்தவராயன் என்னும்அயோத்திதாச பண்டிதர். இவரைமக்கள் எல்லாரும், தென்னிந்தியச்சமூகச் சீர்திருத்தத்தின்தந்தை என்றேபோற்றிப் புகழ்ந்துள்ளனர். இவரதுநற்கருத்துகள் தமிழகம், மைசூர், ஆந்திரம், திருவிதாங்கூர், பர்மா, மலேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கைமுதலிய நாடுகளில்பசுமரத்தாணியாய்ப் பதிந்துள்ளன.

தோற்றம்

சென்னைஆயிரம் விளக்கில்உள்ள, மக்கிமா நகரில், 1845ஆம்ஆண்டு திங்கள்இருபதாம் நாள்பிறந்தார். இவரின் தந்தையார்பெயர் கந்தசாமி. இவரின்பெற்றோர் இவருக்குக்காத்தவராயன் என்றுபெயரிட்டு அன்புடன்வளர்த்து வந்தனர்.

கல்வி நிலை 

பள்ளிக்குச்சென்று கல்விகற்கும்போது, அவர் பிஞ்சுநெஞ்சில் நஞ்சாய்இறங்கியது தீண்டாமைக்கொடுமை. ஆம்! தீண்டாமை என்பதுபெருங்குற்றம் என்றும், மனிதநேயமற்றசெயல் எனஇன்றும் பேசப்பட்டாலும், அன்றேஅவர் உள்ளத்தைஅது வாட்டியது.

குருவைப் போற்றிய குருமணி

 வீ.அயோத்திதாசப்பண்டிதர் என்பாரிடம்காத்தவராயன் கல்விகற்றார்; சித்த மருத்துவம்பயின்றார். இவர், குருவிடம் பற்றும்பாசமும் கொண்டிருந்தார். தம்முடையகுரு எழுதியபாடலை, உயர் பிரிவைச்சார்ந்த ஒருவர்குற்றம் என்றுசுட்டிக்காட்ட, அதனைக் கேட்டுக்கொதித்தெழுந்தார். சென்னைப் புரசைவாக்கத்தில், தம்ஆசானுக்கும் குற்றம்கூறியவருக்கும் நேரடிகருத்து மோதலில்ஏற்பாடாகியது, குற்றம் கூறியவர்போட்டிக்கு வராமையால், இவர்தம்ஆசிரியர் வெற்றிபெற்றார். அவர் படைத்தகவிதையைப் பிற்காலத்தில், தாம்தொடங்கிய ஒருபைசாத்தமிழன் இதழில்வெளியிட்டார். தம்முடைய காத்தவராயன்என்ற இயற்பெயரைவிடுத்து, ஆசிரியர் பெயரையேதம் பெயராகச்சூட்டிக்கொண்டு அயோத்திதாசப்பண்டிதர் ஆனார்.

திருமணம்

சமூகச்சீர்திருத்தக் கருத்துகளைவிதைத்துப் பயிராக்கிமகிழ்ந்தவர் பண்டிதர். இவர், நீலகிரிமலைப்பகுதியில் வாழும்தோடர் இனபிரிவில் கலப்புத்திருமணம் செய்துகொண்டுபத்து ஆண்டுகள்இரங்கூன் சென்றுவாழ்ந்தார். அக்காலத்தில் தேயிலைபறிப்போர், விவசாயக் கூலிவேலைசெய்வோர், மரம் அறுப்போர்ஆகியோரின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார்.

புத்தநெறி

அயோத்திதாசர்இந்துமதக் கருத்துகளைஆழ்ந்து கற்றவர்; புத்தநெறியால்கவரப் பெற்றார். அதனால், பக்தமதக்கருத்துகளை எல்லாருக்கும்எடுத்துரைத்தார். தமக்குப் பிறந்தமகன்களுக்குப் பட்டாபிராமன், மாதவராம், சானகிராமன், இராசாராம்என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார். புத்தரைவிரும்பிச் சார்ந்தஇவர், தம் மகள்களுக்குஅம்பிகாதேவி என்றும், மாயாதேவிஎன்றும் பெயரினைச்சூட்டினார்.

சமூகப்பணி

இவர்மனித வாழ்க்கைக்குத்தேவையற்ற சாதிமதப் பிரச்சினைகள்தீர மக்கள்அடிப்படை உரிமைகள்பெற, அல்லும்பகலும் அயராதுஉழைத்தார். சித்த மருத்துவத்தில்கைதேர்ந்ததால், மருத்துவர் என்றும்பண்டிதர் என்றும்அழைக்கப் பெற்றார். அவர்வாழ்ந்த காலத்தில், தாழ்த்தப்பட்டமக்களை தரக்குறைவாகநடத்தியதாக, உரிய ஊதியம்கொடுக்காது கால்வாய்வெட்டச் செய்ததும்அவர் உள்ளத்தைத்தீயாய்ச் சுட்டெரித்தது

அயோத்திதாசர்தாமே முன்னின்று, தாழ்த்தப்பட்டமக்கள் உரிமைக்குஅரும்பாடுபட்டார். எவரையும் சாதிப்பெயரைச்சொல்லி அழைப்பதுதவறு என்றார். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்விவசதியோடு கல்விஉதவித்தொகை அளிக்கவும்கல்வியில் தேர்ச்சிபெற்றவருக்கு அரசுவேலையும்உள்ளாட்சி அமைப்புகளில்வாய்ப்பும், பொது இடங்களில்நுழைய உரிமையும், கிராமஅலுவலராய்ப் பணியமர்த்தஆணைகளும் வேண்டுமென்றுதுணிவோடு வலியுறுத்திவெற்றி கண்டார். தாழ்த்தப்பட்டமக்களுக்குக் கல்விகற்க அனுமதிமறுக்கப்பட்ட சூழலில்பிரம்ம ஞானசபை ஆல்காட் (1832 - 1907) தொடர்பால், சென்னையில் முக்கியமானஐந்து இடங்களில்ஆல்காட் (1832 - 1907) தொடர்பால், சென்னையில் முக்கியமானஐந்து இடங்களில்ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள்என தலித்துகளுக்குஇலவசப் பள்ளிகளைநிறுவினர்.

இதழ்ப்பணி 

அன்றையகாலணா விலையில்ஒருபைசாத் தமிழன்என்ற இதழைவெளியிட்டார். அது, 19.06.1907 முதல் சென்னைஇராயப்பேட்டையில் இருந்துபுதன்தோறும் நான்குபக்கங்களுடன் வெளிவந்தது. உயர்நிலையும்இடைநிலையும் 60 கடைநிலையும் பாகுபடுத்திஅறிய முடியாதமக்களுக்கு நீதி, சரியானபாதை, நேர்மை ஆகியவற்றைச்செய்திகளாக்கினார்.

புதிய தீபாவளி 

தீபங்களின்வரிசை தீபாவளி. கண்ணன்நரகாசுரனைக் கொன்றுவெற்றி பெற்றநாளே இத்திருநாள்என்றும், மகாவீரர் முக்திஅடைந்த நாள்தீபாவளி என்றும்இன்றுவரை பேசப்படுகிறது. ஆனால், பௌத்தசமயத்தில் ஆழங்கால்பட்டவரானஅயோத்திதாசப் பண்டிதர், தமதுமருத்துவ ஆராய்ச்சியின்படி, எள்செடியின் விதையிலிருந்துநெய் கண்டுபிடித்ததிருநாளே தீபாவளிஎன்று புதியதோர்விளக்கம் தந்தார். அதற்குஆதாரமாக சப்பான்நாட்டில் இன்றும்நுகர்பொருள் கண்டுபிடிப்புத்திருநாளாகத்தான் தீபாவளியைக்கொண்டாடுகிறார்கள் என்றுசான்று கேட்டார்.

இயற்றிய நூல்கள்

புத்தரதுஆதிவேதம் என்னும்நூலை இருபத்தெட்டுக்காதைகள் கொண்டபெருநூலாக எழுதினார். இதற்குச்சான்றாகப் பெரும்குரு நன்னூல்விளக்கம், நாயனார் திரிகுறள், சித்தர்பாடல்கள், வைராக்கிய சதகம், மச்சமுனிவர்ஞானம் முதலியநூல்களைத் துணைநூல்களாகக் கொண்டார். ஆதிவேதத்தைப்பாலி, ஆங்கிலம் ஆகியமொழிகளின் துணையுடன்எழுதியுள்ளார். இவரது இந்திரதேசசரித்திரம் என்னும்நூலும் பாராட்டத்தக்கது. இவைதவிர, இருபத்தைந்துக்கும் மேற்பட்டசிறு நூல்களைவெளியிட்டார். வீரமாமுனிவர் போல்எழுத்துச் சீர்திருத்தமும்செய்துள்ளார்.

 இவர், திருவாசகத்திற்கும் உரை எழுதியுள்ளார்.

 நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. அதாவது, உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய், நம்உள்ளத்தில் நறுந்தேனைப் பெய்வித்தார். இத்தகுநற்சான்றோர் 1914 மேமாதம் ஐந்தாம் நாள் பொன்னுடல் நீத்துப் புகழுடம்பு எய்தினார். சமூகஒருங்கிணைப்பாளராய் வாழ்ந்து மக்களுக்கு உழைத்த உத்தமரைப் போற்றுவோம்; அவர்தம்சீரிய செயல்களைத் தொடர்வோம்.

Incoming Search Terms:

அயோத்திதாசப் பண்டிதர்,அயோத்திதாச பண்டிதர் important question,அயோத்திதாச பண்டிதர்,பண்டிதர் அயோத்திதாசர்,அயோத்திதாசர் பண்டிதர் தமிழல்,திராவிடத் தலைவன் அயோத்திதாசப் பண்டிதர்,அயோத்திதாச பண்டித,அயோத்திதாச பண்டிதர் வினாக்கள்,அயோத்திதாசர்,#அயோத்திதாசர்,அயோத்திதாசர் புத்தகம்,அயோத்திதாசர் வரலாறு,அயோத்திதாசர் நூல்கள்,#பண்டிதர்,அயோத்திதாசர் சிந்தனைகள்,யார் இந்த அயோத்திதாசர்?,அயோத்தி தாசர்,அயோதிதாசப்பன்டிதர் வாழ்கை வரலாறு,தாழ்த்தப்பட்டோர் விடுதலை

iyothee thass,c. iyothee thass,iyothee thass pandithar,who is this iyothee thass,iyodhee thass pandithar,iyothee thass pandithar history,history of iyothee thass pandithar,hhistory of iyothee thass pandithar,c iyothee thass,iyodhee thass,iyothee thaas,ayothee thaas,iyothee,pandit iyothee thass,iyothee thass history,iyothee thass history in tamil,c iyothee thass history in tamil,iyothee thasa pandithar,iyothee thasa pandithar tnpsc,iyothee thasar

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad